சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. “ஆவாரம் பூ + நிலவேம்பு”.. இப்படி பயன்படுத்தினால்!
நம் தாய் அல்லது தந்தை வழியில் உள்ள இரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் இருந்தால் நமக்கு அந்த நோய் வர அதிக வாய்ப்பு இருக்கின்றது. நம் நாட்டில் மக்கள் அதிகம் பாதிப்படும் நோய் சர்க்கரை.. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதால் தான் இந்த நோய் பாதிப்பு அதிகமாகிறது.
நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இதை இயற்கை வைத்தியம் மூலம் செய்வது சிறப்பு.
தேவையான பொருட்கள்:
*ஆவாரம்பூ
*நிலவேம்பு
செய்முறை
ஆவாரம்பூ மற்றும் நிலவேம்பு ஆகிய இரண்டையும் 500 கிராம் அளவு எடுத்து வெயிலில் உலர்தி காய வைத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் போட்டு பொடியாக்கி சேமிக்கவும். பொடி நைஸாக இருக்க வேண்டும். கொரகொரப்பாக இருந்தால் அதை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
பயனப்டுத்தும் முறை…
ஒரு கிளாஸ் அளவுள்ள நீரில் 1 ஸ்பூன் அளவு ஆவாரம்பூ + நிலவேம்பு பொடியை சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மற்றொரு தீர்வு…
தேவையான பொருட்கள்..
*பாகற்காய்
*சின்ன வெங்காயம்
ஒரு முழு பாகற்காயை எடுத்து அதில் உள்ள விதியை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு தட்டில் சேர்க்கவும்… அடுத்து 1/2 கப் தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தை அரைத்து பேஸ்டாக்கி பாகற்காய் விழுதில் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை…
உருண்டைகளை தினமும் 2 என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.