கொரோனாவால் இத்தனை லட்சம் பேர் பலியானார்களா?

0
103
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Previous articleஇன்றைய ராசி பலன் 26-08-2020 Today Rasi Palan 26-08-2020
Next article19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயம்