தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!

0
196
Did you ask me to cut my hair? A government school student attempted suicide in Cuddalore district!
Did you ask me to cut my hair? A government school student attempted suicide in Cuddalore district!

தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன் முறையாக வெடித்தது. இதனையடுத்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிளஸ் ஒன் மாணவி பள்ளியில் தற்கொலை செய்யும் முயற்சியும் அரங்கேறியது. மேலும் நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவன் இரண்டாம் மாடியில்லிருந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவமும் நடந்து முடிந்த நிலையில் தற்போதுகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முகாசபருர் கிராமத்தை சேர்ந்த ஒருவரது மகன். இவர் அதேகிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியா ஜோசப் ராஜா, அதிகளவில் தலைமுடி வைத்துள்ள மாணவர்களை தனியாக அழைத்து, தலை முடியை அழகாக வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டுமென அறிவுரை கூறியனார்.

அப்பொழுது மாணவன் ஜெயக்குமார் தலை முடியை வெட்ட மாட்டேன் என்று கூறினார், அதற்கு தலைமை ஆசிரியர், தலை முடியை வெட்ட கூடாது என்று நினைத்தால் பள்ளியின் பெற்றோர் கழக பொறுப்பாளர்களிடம் கையொப்பம் வாங்கி வரவேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவன் ஜெயக்குமார், பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளர்.

அதனையடுத்து அந்த கிராமத்தில்லுள்ள மருந்து கடையில் எறும்புக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மாணவன் மதியம் பள்ளி முடியும் நேரத்தில், தான் மருந்து குடித்து விட்டதாக சக மாணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த, மாணவனின் பெற்றோர்கள் உடனடியாக மாணவனை, மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை முடியை தலைமையாசிரியர் அழகாக வெட்டி வர சொன்ன காரணத்தினால், பிளஸ் டூ மாணவன் பூச்சிமருருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி சின்னசேலம் மாணவி மரணம், சேலம் மேச்சேரி பள்ளி மாணவி தற்கொலை முயற்சி மற்றும் காஞ்சிபுரம் மாணவர்கள் தற்கொலை முயற்சி வரிசையில் தற்போது கடலூர் மாணவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleகனியாமூர் பள்ளி சூறையாடல் காரணம் என்ன? தடையவியல் நிபுணர்கள் அதிரடி ஆய்வு!
Next articleபொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!