கனியாமூர் பள்ளி சூறையாடல் காரணம் என்ன? தடையவியல் நிபுணர்கள் அதிரடி ஆய்வு!

0
76

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்பது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான நிபுணர்கள் நேற்று ஆய்வு செய்தார்கள்.

அந்த சமயத்தில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் எந்த வகையிலான பொருட்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டார்கள். எந்தவிதமான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள், வெடி பொருட்களை கொண்டு வந்தார்களா? என்று ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

அதோடு தீ வைப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய எரிபொருள், வன்முறையாளர்களின் நோக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும், விசாரணை செய்தனர்.

அப்படி விசாரணை செய்த சமயத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த மது பாட்டில்கள் சுத்தியல் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியின் அடையாளத்துடன் கூடிய தூண்டு மற்றும் தென் புரட்சியாளர்கள் என பெயரிடப்பட்ட போராட்ட பலகை உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தையும் சேதப்படுத்தி அவற்றின் ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்றிருப்பதும், சிலவற்றை சேதப்படுத்தி வீசி சென்றிருப்பதும், தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக தடைய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் தெரிவிக்கும் போது தடயங்களை சேகரித்து வருகின்றோம். இந்தப் பள்ளி இனி செயல்படக்கூடாது என்ற நோக்கத்தினடிப்படையில் இந்த வன்முறை நடைபெற்று இருப்பது போல தெரிகிறது. ஆனாலும் முழுமையான ஆய்வுக்கு பிறகு தான் உறுதியாக எதையும் தெரிவிக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.