இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!
நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இஞ்சி ஓர் மருத்துவ கொண்ட பொருளாகும். இந்த இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இதில் துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.
இந்த இஞ்சியை சூடு நீரில் போட்டு சேர்த்து பருகினால் உடலுக்கு தேவையான அனைத்து வித சத்துக்களும் கிடைக்கும்.
சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
1)சளியை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.
2)இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
3)அஜீரணக் கோளாறை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
4)உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
5)வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.
6)உடல் அசதி, உடல் வலியை போக்க உதவுகிறது.
7)உடலில் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
8)வாயுத் தொல்லையை சரி செய்ய உதவுகிறது.
இஞ்சி நீர் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி
*தண்ணீர்
*எலுமிச்சை சாறு
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் 1 துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.