இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையிலுள்ள வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக ஆதரவாளரும்,பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி அதிமுகவையும் அதன் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது,துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா என்று முதல்வர் கேட்கிறார்.குழாய் சண்டை போடுபவர்களுக்கு துண்டு சீட்டு தேவையில்லை,பைத்தியகாரனுக்கு துண்டு சீட்டு தேவையில்லை,போதையில் உளறுவதற்கு துண்டு சீட்டு தேவையில்லை,மக்களுக்கு நல்லது செய்பவர்கள் குறிப்பெடுத்து தான் பேசுவார்கள்.திட்டமிடுவது தான் தலைவனுக்குரிய முக்கிய பண்பு.எனவே எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு துண்டுச் சீட்டு தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர்,நான் கேட்கும் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி நாளைக்கே பதில் சொல்ல வேண்டும்.சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனீங்களா இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.சசிகலாவிற்கு விவரம் தெரியாமல் எடப்பாடி பழனிசாமியை நம்பி தான் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார்.ஆனால் இப்போது சசிகலாவை சேர்த்து கொள்ள மாட்டோம் என்கிறார்கள்.
ஆயிரம் சசிகலா வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார் ஆனால் அவர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப்போகிறார் என்பது அர்த்தம் என்று அடித்து சொல்கிறார் திண்டுக்கல் லியோனி.