76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் ராஜா அண்ணாமலை சாலையில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அதில், நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தான் விஜயகுமார்.

இந்த நிறுவனமானது மிகவும் குறைந்த விலையில், நிலம் வாங்கி அதில் வீடும் கட்டி தருவோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்ட ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜாமணி என்பவர் விஜயகுமார் மற்றும் இன்னும் இரண்டு பேரிடம் 2019  ஆம் ஆண்டு பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை கொடுத்த பிறகு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நிலம் மற்றும் வீடு தொடர்பான எந்த செயலையும் அவர்கள் செய்யவில்லை. இது குறித்து விஜயகுமார் உள்ளிட்டவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்கள் இதை பெரிதாக கண்டுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து பணம் கொடுத்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர். எனவே, இந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் உட்பட மூன்று பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது, இவர்கள் அனைவரும் சேர்ந்து இதேபோல் பதினாறு பேரிடம் நிலம் வாங்கி வீடு கட்டி தருவதாக கூறி ரூபாய் 76 லட்சம் ரூபாயை ஏமாற்றியது கண்டுப்பிடிக்கப்பட்டது.

எனவே, உடனடியாக நிர்வாக இயக்குனர் விஜயகுமாரை காவல் துறையினர் காவல் செய்தனர். மீதமுள்ள இரண்டு பேர் இதனை அறிந்து தலைமறைவாக உள்ளனர். எனவே, காவல் துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.