திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!!

0
279
#image_title

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!!

தமிழகம் ஆன்மீகத்திற்கு பேர் போன மாநிலம்.3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள்,கலை சிற்பங்கள்,தமிழ் மண் மற்றும் மக்களின் வரலாறு ஆகியவை கண்டு இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலகமே வியந்து பார்த்து வருகிறது.இதற்கு சிறந்த சான்று தஞ்சை பெரிய கோயில்.அதுமட்டும் இன்றி உலகெங்கும் வாழும் இந்து மத மக்கள் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களுக்கு வந்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஹிந்து கோயில்கள் இருக்கின்றது.அதில் சுமார் 38,615 கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.ஹிந்து கோயில்கள் அபகரிப்பு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் அதிகமாகி இருக்கிறது.திமுக கட்சி இந்து மக்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதில் ஒன்று தான் இந்த கோயில் ஆக்கிரமிப்பு.திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறையை பகடையாக பயன்படுத்தி கொண்டு இந்து மக்கள் மனதையும்,நம்பிக்கையையும் நோகடிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் விலை மதிப்பற்ற பழங்கால சிலைகள்,நகைகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது.அதுமட்டும் இன்றி முக்கியமான கோயில்களில் நேரடியாக கடவுள் சிலைகளை பார்த்து வழிபட இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுபவதாக உள்ளது.பழங்கால கோயில் சிலைகள்,விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவது அதிகரித்து இருக்கும் நிலையில் இந்த தடைகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பார்க்கும் பொழுது இந்து சமய அறநிலைய துறையின் மேல் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

திமுக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறையின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வழிபாட்டு தளங்கள் மக்களுக்காக கட்டப்பட்டு இருக்கிறது.
இந்த வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் சாமிக்கு காணிக்கையாக வழங்கும் பணத்தில் தான் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும்,நிர்வாகிகளுக்கும் ஊதியமாக வழங்கப்படுகிறது என்பதை உணராமல் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை நடந்து கொள்கிறது என்ற விமர்சனமும்,கண்டனமும் இந்து மக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியும் இது குறித்து தற்பொழுது விமர்சனம் செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.இதனால் அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைத்த பிரதமர் மோடி அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்பொழுது தென் மாநிலங்களை ஆளும் கட்சிகள் ஹிந்து கோயில்களை ஆக்கிரமித்து வருகிறது என்று பேசினார்.குறிப்பாக தமிழகத்தை ஆளும் திமுக அரசு தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களை ஆக்கிரமித்து அராஜகம் செய்து வருகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களின் சிலைகள்,நகைகளை இந்து சமய அறநிலையத்துறை கொள்ளையடித்து விட்டதாக சாடினார்.

ஹிந்து கோயில்களை போல் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை திமுக அரசு அபகரிக்குமா? அவர்களுக்கு அந்த தைரியம் இருக்கிறதா? அவர்களால் அதை செய்ய முடியாது.அவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதினால் ஹிந்து மக்கள் மனதை மட்டும் தான் திமுக அரசு புண்படுத்தும் என்று கூறினார்.திமுக அரசால் அபகரிக்கப்பட்டு உள்ள பல்லாயிரக்கணாக்கான கோயில்களை அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீட்க்குமா? அதற்கான நடவடிக்கையை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி ஹிந்து கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

Previous articleடிரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரையில கிடக்கும் !!! எழுத்தாளர் தீரஜ் வைடி கூறியது என்ன!!?
Next articleநான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கெண்டேன்!!! பிரபல ஹிந்தி நடிகை பேட்டி!!!