மக்களின் உரிமையை திமுக தட்டி பறிக்கிறது! பாஜக முன் வைய்த்த குற்றச்சாட்டு!

0
82
DMK robs people of their rights! Accusation made by BJP!
DMK robs people of their rights! Accusation made by BJP!

மக்களின் உரிமையை திமுக தட்டி பறிக்கிறது! பாஜக முன் வைய்த்த குற்றச்சாட்டு!

அந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா ஏற்பட்டதன் காரணமாக முக்கிய மக்கள் கூடும் இடங்கள் பலவும் மூடியே உள்ளது. மக்கள் தொகை மிகுதியாக வரும் பல இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று கோவிலாகும். மக்கள் பலர் மன நிம்மதிக்காக கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒரு விஷயம். எனவே அங்கே எப்படியும் கூட்டம் வருவது சகஜம் என்று நினைத்த பலரும், அரசியல் கட்சிகளும், கோவிலை மூடி உள்ளனர்.

கோவில்களில் செய்யப்படும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும், மக்கள் செல்ல  கோவில்களை திறக்கவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளத்தன் காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு உள்ளோம். ஆனால் தமிழகம் முழுவதும் இன்னும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் காரணத்தினால் தற்போதும் கூட கோவில்களில் வழிபாடு கிடையாது.

பொது மக்களின் கூட்டங்களை தவிர்க்கவும், தடுக்கவும் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களில், கோவில்கள் அருகேயே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோன்று கோவில்களில் அனைத்து நாட்களிலும் மக்களை அனுமதிக்க கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர் மேற்கு, விருதுநகர் கிழக்கு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று முன்னாள் மத்திய மந்திரி  பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் அவர் பேசும்போது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை கூட திமுக அரசு கட்டிப் பறக்கிறது என்று குற்றம் கூறினார்.

கோவில்களில் வழிபாடு நடத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை என்றும் கூறினார். இந்த உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.