குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க? இதனை மட்டும் கொடுத்தால் போதும்!

0
602
#image_title

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க? இதனை மட்டும் கொடுத்தால் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவதில்லை. உடலுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நோய்கள் உண்டாகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகள் அதிகப்படியான பேக்கரி சார்ந்த உணவுகள் மற்றும் சாக்லேட், பிஸ்கட், போன்ற தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பசியின்மை உண்டாகிறது.

பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும் .அவ்வாறு கொடுத்தால் குடல் சுத்தமாகும். பிறகு நன்றாக பசி எடுக்கத் தொடங்கும். குழந்தைகளுக்கு பசி எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் சீரகம் சிறிதளவு, நான்கு மிளகு, பூண்டு ஒன்று, சிறுதுண்டு இஞ்சி, ஓமம் சிறிதளவு ,இவை அனைத்தையும் நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் நாம் இடித்து வைத்திருந்த சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ,ஓமம் இவற்றை போட்டு நன்றாக கலந்து கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு அதனை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் மிதமான சூட்டில் 1/2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காலை வெறும் வயிற்றில் இந்த கசாயத்தை கொடுக்க வேண்டும். ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம் குடல் சுத்தமாகி குழந்தைகளுக்கு பசி எடுக்க ஆரம்பித்து விடும்.