உங்கள் நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை முதலில் செய்யுங்கள்!!

0
72
#image_title

உங்கள் நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை முதலில் செய்யுங்கள்!!

நம் அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோயாக இருப்பது சளி. இவை ஆரம்பத்தில் சாதாரண சளியாக உருவாகி நாளடைவில் நெஞ்சு சளி, நுரையீரல் சளியாக தொற்றிக் கொள்கிறது. இந்த நாள்பட்ட சளி நமக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது.

இந்த நாள்பட்ட சளி பாதிப்பை சில நிமிடங்களில் கரைத்து வெளியேற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும்.

சளி பாதிப்பு எதனால் ஏற்படுகிறது…

*குளிரூட்டபட்ட பொருட்களை உண்ணுதல்

*அதிக இனிப்பு உண்ணுதல்

*மழை காலங்களில் சளி பாதிப்பு ஏற்படுதல்

*குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்தல்

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்

நுரையீரல் சளிக்கான அறிகுறிகள்…

*அதிக சளி

*வறட்டு இருமல்

*தும்மல்

*நெஞ்செரிச்சல்

*தொண்டை எரிச்சல்

*தொண்டை கரகரப்பு

*ஈளை நோய்

*இளைப்பு மற்றும் உடல் சோர்வு

*காய்ச்சல் வருவது போல் உணர்வு

*தலைவலி மற்றும் தலை பாரம்

*மூக்கில் நீர் வடிதல்

*மூக்கடைப்பு மற்றும் மூச்சிவிடுவதில் சிரமம்

நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*துளசி இலை

*மிளகு

*வெற்றிலை

*கற்பூரவல்லி

*பூண்டு

*சுக்கு

*சீரகம்

*மஞ்சள்

*தேன்

செய்முறை..

அடுப்பில் ஒரு டீ பாத்திரம் வைத்து அதில் 2 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதில் 10 துளசி இலை, 2 கற்பூரவல்லி இலை, 1 வெற்றிலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

தொடர்ந்து 5 மிளகு, 2 பல் பூண்டு இடித்தது, 1//4 தேக்கரண்டி சீரகம், சிறு துண்டு சுக்கு இடித்தது மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 2 கிளாஸ் நீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை 1 கிளாஸுக்கு வடிகட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.4