தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!!

0
25
#image_title

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!!

நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.இந்த தோசையை ஹோட்டல் சுவையில் மொறு மொறுனு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 2 கப்

*உளுந்து பருப்பு – 1/2 கப்

*கடலை பருப்பு – 1/2 கப்

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*அவல் – 1/4 கப்

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

1.முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 கப் பச்சரிசி,1/2 கப் உளுந்து,1/2 கப் கடலை பருப்பு,1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை நன்கு அலசிக் கொள்ளவும்.பின்னர் அரசி கலவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.இதை 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

2.அதேபோல் ஒரு பவுல் எடுத்து அதில் 1/4 கப் வெள்ளை அவல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதையும் 6 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

3.அரசி கலவை மற்றும் அவல் நன்கு ஊறி வந்த பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

4.இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து விடவும்.பின்னர் இதை மூடி போட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

5.அடுத்து மாவு நன்கு புளித்து வந்த பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு குழிக்கரண்டியில் எடுத்து ஊற்றி தோசை வார்த்து கொள்ளவும்.பின்னர் அதில் 1 1/2 தேக்கரண்டி நெய் அல்லது 1 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேக விட்டு எடுக்கவும்.இந்த முறையில் தோசை மாவு தயார் செய்து தோசை வார்த்தல் மிகவும் சுவையாகவும்,மொறு மொறுனும் இருக்கும்.