உங்கள் பற்களில் அழுக்குகள் நீங்கி, பளிச்சுன்னு மாறணுமா? இதோ டிப்ஸ் !

0
32
#image_title

உங்கள் பற்களில் அழுக்குகள் நீங்கி, பளிச்சுன்னு மாறணுமா? இதோ டிப்ஸ்

நாம் பற்களை சுத்தம் செய்ய நிறைய விதவிதமான பேஸ்ட்கள் வந்துவிட்டது. ஆனாலும், என்னதான் ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்த்தாலும் பற்கள் சுத்தமாவதில்லை. எப்போதும் செயற்கையாக பயன்படுத்தப்படும் பொருட்களை வட இயற்கை பொருட்கள் தான் பெஸ்ட். இயற்கை பொருட்களில் ஆரோக்கியம் நிறைந்துள்ளன.

சரி வாங்க.. எப்படி இயற்கையான பொருட்களை வைத்து நம் பற்களை சுத்தம் செய்வோம் என்று பார்ப்போம் –

வேப்பங்குச்சி

இன்றைக்கு கூட கிராமப்புறங்களில் வேப்பங்குச்சியைத்தான் பயன்படுத்தி பற்களை துவலக்குகிறார்கள். அதனால்தான் அவர்கள் பற்கள்  இன்னும் உறுதியாக இருக்கிறது. வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் உள்ளது. எனவே, வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்கினால் பற்கள் சுத்தமாவதுடன், துர்நாற்றம் நீங்கும், பற்களில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

உப்பு

தினமும் உப்பைக் கொண்டு நம் பற்களை துலக்கலாம். உப்பில் உள்ள சோடியம் பற்களில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. பற்களில் வலிகள் வந்தால் உடனே உப்பை வைத்து பற்களை துலக்கினால் நன்மை கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

நம் பற்களை பாதுகாக்க வேண்டும் என்றால் கடுகு எண்ணெய்யால் பற்களை நன்றாக துலக்கலாம். இப்படி துலக்கும்போது பற்கள் நன்கு வெள்ளையாக மாறும். கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து பற்களை துலக்கினால் பற்கள் பளிச்சிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை கொண்டு நாம் பற்களை துலக்கினால் பற்கள் பளிச்சிடும். ஏனென்றால் எலுமிச்சை பழத்தில அதிகளவில் வைட்டமின் சி உள்ளது. இது பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். எலுமிச்சைச்சாறு பற்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். எனவே, தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களையும், ஈறுகளை தேய்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

கிராம்பு

சிறிது கிராம்பு பொடியாக்கி அதை வைத்து பற்களை துலக்கினால் பற்கள் வெள்ளையாகும். மேலும், பற்களில் வலிகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

author avatar
Gayathri