எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!!
காலநிலை மாற்றத்தால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.இதனால் எந்நேரமும் மூக்கில் சளி ஒழுது கொண்டே இருக்கும்.இதனால் அடிக்கடி மூக்கு பகுதியில் புண்,எரிச்சல் ஏற்படும்.
இனிமேல் இதுபோன்று சளி பிடிக்காமல் இருக்க நெல்லைக்காய் லேகிய உருண்டை செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மலை நெல்லிக்காய்
2)அதிமதுரப் பொடி
3)ஜாதிக்காய் பொடி
4)தேன்
5)திப்பிலி பொடி
6)கிராம்பு பொடி
7)ஏலக்காய் பொடி
அதிமதுரப் பொடி,திப்பிலி பொடி,ஜாதிக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.மூன்றையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும்.
செய்முறை:-
ஒரு கப் மலை நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இந்த நெல்லிக்காயை வெயிலில் ஒரு நாள் முழுவதும் காயவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் நெல்லிக்காயை வெந்நீரில் போட்டு 15 நிமிடங்கள் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.பின்னர் நெல்லிக்காய் துண்டுகளை உலர்த்தி மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த நெல்லிக்காய் பேஸ்டை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி திப்பிலி பொடி,ஒரு தேக்கரண்டி அதிமதுரப் பொடி,ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
அதன் பிறகு 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் 50 மில்லி தேன் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த உருண்டையை தினமும் காலை,மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலில் கோர்த்துள்ள சளி கரைந்து வெளியேறும்.