ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க!

Photo of author

By Divya

ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க!

தற்போது உள்ள உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டு ‘உணவே மருந்து’ என்ற நிலை மாறி ‘மருந்தே உணவு’ என்ற நிலை வந்துவிட்டது.

உணவுமுறை மாற்றத்தால் ஆண், பெண் பல வித தொந்தரவுகளை பார்க்கும் நிலை உருவாகி விட்டது. பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது.

ஆண்களுக்கு விந்து குறைபாடு, மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிது. இந்த பாதிப்புகள் நீங்கி உடல் குதிரை பலம் பெற ஆண்கள் ‘அமுக்கரா சூரணம்’ சாப்பிடுவது நல்லது.

*அமுக்கரா கிழங்கு
*திப்பிலி
*சுக்கு
*இலவங்கம்
*கிராம்பு
*தேன்

சூரணம் செய்யும் முறை…

அமுக்கரா கிழங்கு, திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை சிறிது வாங்கிக் கொள்ளவும்.

அடுத்து சுக்கு, இலவங்கம், கிராம்பு சம அளவு எடுத்து கொள்ளவும். தற்பொழுது குறிப்பிடப்பட்டுள்ள 5 பொருட்களையும் சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தி எடுக்கவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி சேமித்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பால் சேர்த்து காய்ச்சி அமுக்கரா சூரணம் 1 ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் அளவு சேர்த்து கலக்கி பருகவும்.