உங்களுக்கு தொப்பை இருக்கின்றதா!!? அதற்கு என்ன காரணம் என்பதை தெரிஞ்சுக்கோங்க!!!

0
38
#image_title

உங்களுக்கு தொப்பை இருக்கின்றதா!!? அதற்கு என்ன காரணம் என்பதை தெரிஞ்சுக்கோங்க!!!

நம்மில் பலருக்கு உடலில் தொப்பை இருக்கின்றது. இதை குறைக்க நாம் பல வகையான மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் எடுத்து இருப்போம். ஆனால் தொப்பை குறைவது போல குறைந்து மீண்டும் தொப்பை ஏற்படும். இந்த தொப்பை உருவாக பல காரணங்கள் உள்ளது. அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்வது, சீரற்ற தூக்கம் மேலும் பல வகையான காரணங்கள் இருக்கின்றது.

இந்த தொப்பை நம்முடைய அடி வயிற்றை சுற்றி இருக்கும். அதாவது அடி வயிற்றில் கொழுப்புகள் சேர்வதால் தொப்பை உருவாகின்றது. இந்த தொப்பை உருவாகக் காரணமும், தொப்பையை குறைக்க உதவும் வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தொப்பை ஏற்படுவதற்கான காரணங்களும் தொப்பை ஏற்படுவதை தடுக்க வழிமுறைகளும்…

* பிஸ்கெட்டுகளும் பிற பேக்கரி உணவுகளும் அதிகமாக உட்கொள்வதால் அடிவயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து தொப்பை உருவாகின்றது. எனவே தொப்பை உருவாவதை தடுப்பதற்கு பிஸ்கட்டுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் இருந்து வாங்கி உண்ணும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* உடல் இயக்கம் குறைவாக இருந்தால் அதாவது எந்த வேலையும் செய்யாமல் நடக்காமல், ஓடாமல் என்று எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும் தொப்பை ஏற்படும். எனவே தொப்பை உருவாவதை தடுக்க குறைந்தபட்சம் எழுந்து நடக்க வேண்டும்.

* ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொண்டால் தொப்பை உருவாகும். எனவே தொப்பையை தடுக்க ஆல்கஹால் அதிகம் குடிப்பதை நிறுத்த வேண்டும்.

* உணவு நன்றாக இருக்கின்றது என்று அதிகப்படியாக சாப்பிடும் பொழுதும் அடிவயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து தொப்பை உருவாகும். எனவே தொப்பை உருவாவதை தடுக்க குறைந்த அளவு உணவு சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* உடல் எடை அதிகரித்து தொப்பை உருவாக மரபணுக்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.

* சரியாக தூங்கவில்லை என்றாலும் நமக்கு தொப்பை உருவாகும். அதற்கு என்று அதிகப்படியான நேரம் தூங்கக் கூடாது. அளவாக தூங்கி கொண்டால் தொப்பை ஏற்படுவது தடுக்கப்படும்.

* சிலருக்கு தொப்பை ஏற்படுவதற்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் காரணமாகும். புகைப் பிடிப்பதால் தொப்பையை உருவாக்கும் கொழுப்புகளை மறைமுகமாக அதிகரிக்கின்றது. எனவே தொப்பை உருவாகாமல் தடுப்பதற்கு புகைப் பிடிக்காமல் இருக்க வேண்டும்.