உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!
ஜலதோஷம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்றாகும்.இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல்,வறட்டு இருமல் போன்றவை உருவாகிறது.இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது என்றாலும் சிலருக்கு அவை சேராமல் போய்விடும்.இதனால் வாய்ப்புண்,உடல் சூடு ஆகியவை ஏற்படும்.ஆனால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் ஜலதோஷ பிரச்சனை உடனடியாக சரியாகி விடும்.
தேவையான பொருட்கள்:-
*வெற்றிலை – 2
*இஞ்சி – சிறு துண்டு
*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி
*மிளகு – 1/4 தேக்கரண்டி
*சீரகம் – 1/4 தேக்கரண்டி
*நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி
செய்முறை:-
1.அடுப்பு பற்றவைத்து பாத்திரம் ஒன்றில் 1 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.
2.அதில் வெற்றிலையை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு அதனுடன் சிறு துண்டு இஞ்சியை இடித்து சேர்க்கவும்.
3.பிறகு கொத்தமல்லி விதை,மிளகு,சீரகம் ஆகியற்றை தனி தனியாக இடித்து அதில் சேர்த்து கொள்ளவும்.
4.தண்ணீர் 1 1/2 டம்ளரில் இருந்து 1 டம்ளராக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.பிறகு அதில் 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து 1 நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
5.பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.
ஜலதோஷம் இருக்கும் நபர்கள் இந்த கஷாயத்தை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உறுப்புகளில் தங்கி இருக்கும் சளி அனைத்தும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்.