உங்களுக்கு கொழுப்பு கட்டி இருக்கா? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.. நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்களுக்கு கொழுப்பு கட்டி இருக்கா? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.. நிச்சயம் பலன் கிடைக்கும்!!

ஒரு சிலருக்கு உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக தேங்கி இருக்கும். இதனால் பெரிதளவில் பாதிப்போ, வலியோ ஏற்படாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்:-

1)200 மில்லி நீரில் 2 கொய்யா இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகினால் கொழுப்புக் கட்டி கரையும்.

2)இரண்டு அல்லது மூன்று கொய்யா இலையை சுத்தம் செய்து அரைத்து இரவு தூங்குவதற்கு முன் கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் தடவி காட்டன் துணி கொண்டு கட்டி மறுநாள் காலையில் குளித்துக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்து வர கொழுப்பு கட்டி முழுவதும் கரைந்து விடும்.

3)ஒரு கிண்ணத்தில் சிறிதளவு டூத் பேஸ்ட், 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1/4 தேக்கரண்டி வெங்காய விழுது மற்றும் 1/4 தேக்கரண்டி பூண்டு விழுது சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் தடவி வருவதன் மூலம் கொழுப்பு கட்டி கரைந்து விடும்.

4)சுடுநீரில் கல் உப்பு சேர்த்து கரைத்து அதில் காட்டன் துணி ஒன்றை போட்டு நினைத்து கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் அவை சில நாட்களில் கரைந்து விடும்.

5)தேவையான அளவு நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழப்பி கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்.