உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை..!

0
205
#image_title

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை..!

ஒரு சிலர் டென்ஷனாக இருக்கும் பொழுது நகத்தை கடிப்பார்கள். சிலருக்கு சாதாரணமாகவே நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் சிலருக்கு தானாக ஏற்படும்… சிலருக்கு பிறர் நகம் கடிப்பதை பார்த்து ஏற்படும்.

மனிதர்களிடம் காணப்படும் இந்த பழக்கம் மிகவும் கொடிய பழக்கம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் கைகளால் பல இடங்களை தொடுவோம். இவ்வாறு தொடுவதினால் பாக்டீரியாக்கள், கிருமிகள் கைகளில் தங்கி விடுகிறது. குறிப்பாக நகங்களின் இடுக்குகளில் அழுக்கு தேங்கி விடுகிறது. இப்படி இருக்கும் பொழுது கைகளை சுத்தமாக கழுவாமல் உணவு சாப்பிட்டால் அவை விஷமாகத் தான் மாறும்.

அதேபோல் நகங்களை கடிக்கும் பொழுது நகங்களுக்குள் இருக்கும் அழுக்கு நேரடியாக வாய்க்குள் செல்வதினால் வயிறு வலி, உடல் நலக் கோளாறு ஏற்படும்.

தொடர்ந்து நகம் கடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் நகம் மற்றும் அதன் அருகில் உள்ள சதை பகுதி அதிகளவில் சேதமடையும். இதனால் உடல் உள்ளுறுப்புகள் செயலிழக்க தொடங்கிவிடும்.

சில சமயம் நகம் கடிக்கும் பொழுது அவை உடலுக்குள் சென்று விடும். இதனால் செரிமானப் பகுதியில் பல பாதிப்புகள் ஏற்படும்.

அடிக்கடி நகம் கடித்தால் பற்கள் அதன் வலிமையை இழந்து விடும். நகத்தில் உள்ள அழுக்கு, கிருமிகள் வாய் வழியாக மற்ற உடல் பாகங்களுக்கு சென்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவருவது நல்லது.