உங்களுக்கு பச்சை தேங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

Photo of author

By Divya

உங்களுக்கு பச்சை தேங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

சமையலில் சுவையை கூட்டும் தேங்காயை பச்சையாக சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. பச்சை தேங்காய் இனிப்பு சுவை அதிகம் கொண்டது.

தேங்காயை உணவில் சேர்த்துக் சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும்.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

தேங்காயில் உள்ள நீர்சத்து நம் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அதில் உள்ள நார்ச்சத்து நம் உடலில் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

புரதசத்து மிகுந்த தேங்காய் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக வளர உதவுகிறது.

தொடர்ந்து தேங்காய் துண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்.

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இவை உதவுகிறது.

உடல் சூடு, பித்தம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. வலிப்பு நோயை சரி செய்ய உதவுகிறது.