தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

0
146
#image_title

தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தொப்புளில் விடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் தொப்புளில் சிறிது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்… இதில் ஏதேனும் ஒன்றை சிறிது விடுவதால்.. தொப்புளில் உள்ள நோய் கிருமிகள் முழுவதும் அழியும்.

உடல் சூடு இருப்பவர்கள் தொப்புளில் எண்ணெய் விட்டு வரலாம்… வயிறு வலி, வயிறு மற்றும் பிறப்பு உறுப்புக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் வலியை குணமாக்க தொப்புளில் எண்ணெய் விடலாம்.

தொப்புளில் எண்ணெய் விட்டு வருவதால் கண் பார்வை குறைபாடு நீங்கி பார்வை தெளிவு பெறும். கண் வறட்சி நீங்கும். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளை மையமாக கொண்டு இருக்கிறது. எனவே தொப்புளில் எண்ணெய் விட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும்.

தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்து வந்தால் சரும வறட்சி நீங்கும். வேப்ப எண்ணெய் வைத்து வந்தால் நோய் தொற்று பாதிப்புகள் முழுமையாக நீங்கும்.