உங்களுக்கு கிட்னி ஸ்டோன்? அப்போ இந்த உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும்!

Photo of author

By Divya

உங்களுக்கு கிட்னி ஸ்டோன்? அப்போ இந்த உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும்!

நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் சிறுநீரகம் வழியாக சிறுநீர் மூலம் வெளியேறுகிறது. ஒருவேளை சிறுநீரகத்தில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று சேர்ந்தால் அவை சிறுநீரக கல்லாக உருவாகிவிடும்.

சிறுநீரக கல் பாதிப்பு ஏற்பட்டால் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், வலி, எரிச்சல், துர்நாற்றத்துடனான சிறுநீர் வெளியேறுதல் போன்றவை நிகழும்.

சிறுநீரக கல் பாதிப்பு இருக்கும் நபர்கள் சில உணவுகளை தவிர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரக கல் அதிகரிக்காமல் இருக்கும். அவை என்னென்னெ உணவுகள் என்பது குறித்து கீழே தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிறுநீரகத்தில் கல் இருந்தால் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, வால்நட் போன்ற ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கவும். காரணம் இதில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் தவிர்த்துக் கொள்வது நல்லது.

அதிக கால்சியம் நிறைந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிக புரதம் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். அதிக புரதம் என்று சொல்வது மீன், முட்டை, மாட்டிறைச்சி… இவைகள் தான்.

புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் மீண்டும் சிறுநீரகத்தில் புதிதாக கல் உருவாகத் தொடங்கும்.

அதேபோல் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தாலும் சிறுநீரக கற்கள் அதிகரிக்கும். இவர்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் கீரையை குறைந்தளவு சாப்பிடுவது நல்லது. அதேபோல் பீட்ரூட்டை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது.

காலிஃளவர், தக்காளியில் அதிகளவு ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் அவை சிறுநீரக கற்களை அதிகரித்து விடும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எனவே இந்த காய்கறிகளை உணவில் சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

அதேபோல் உப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டு, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இவை சிறுநீரக கற்களை கரைக்க உதவும். ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த உணவு பொருட்களை உண்ணுதல் நல்லது.