முதுகு பகுதியில் கொப்பளம் உள்ளதா? அப்போ இதை மறைய வைக்க நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்!

Photo of author

By Divya

முதுகு பகுதியில் கொப்பளம் உள்ளதா? அப்போ இதை மறைய வைக்க நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்!

பனி காலத்தில் முதுகில் கொப்பளங்கள் ஏற்படுவது சாதாரண ஒன்று தான் என்றாலும் அவை வலி, அரிப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்துவதால் பெரும் தொல்லையாக மாறிவிடுகிறது. இந்த கொப்பளங்கள் தலையில் பொடுகு இருந்தால் உருவாகும். பனிக்காலத்தில் பெரும்பாலானோருக்கு பொடுகு பாதிப்பு இருக்கும். இவை தலை சீவும் பொழுது முதுகில் விழுவதால் கொப்பளங்கள் ஏற்படுகிறது. இதை குணமாக்க வீட்டு வைத்தியத்தை முயற்சிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

தீர்வு 01:-

கலப்படம் இல்லாத தேனை முதுகில் உள்ள கொப்பளத்தின் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்து வந்தால் கொப்பளங்கள் மறையும்.

தீர்வு 02:-

2 ஸ்பூன் தேனில் 1 ஸ்பூன் பட்டை தூள் சேர்த்து குழைத்து முதுகு கொப்பளத்தின் மேல் தடவினால் அவை விரைவில் குணமாகும்.

தீர்வு 03:-

வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கொப்பளங்கள் மீது தடவி வந்தாலும் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 04:-

ஒரு கப் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு கல் உப்பு சேர்த்து கரைத்து ஒரு காட்டன் துணியில் நினைத்து கொப்பளங்கள் மீது ஒத்தடம் போல் கொடுத்து வந்தால் அவை விரைவில் மறையும்.

தீர்வு 05:-

1/2 கப் தண்ணீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து முதுகில் கொப்பளங்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.