மூக்கில் விடாது சளி ஒழுகிறதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள்..!!
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய மிளகு ரசம் சிறந்த தீர்வாக இருக்கும்.
சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-
*மூக்கு ஒழுகுதல்
*மூச்சு விடுதலில் சிரமம்
*தொண்டை வலி
*மூக்கடைப்பு
*தொண்டை புண்
*நீஞ்சு அனத்தம்
*தலைவலி
*வறட்டு இருமல்
*உடல் சோர்வு
தேவையான பொருட்கள்:-
*கடுக்காய்
*அதிமதுரம்
*மிளகு
*தேன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் கடுக்காய், அதிமதுரம், மிளகு ஆகியவற்றை சம அளவு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அணைத்து இதை ஆற விடவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு தட்டில் சேர்த்து ஆறவிடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை ஒரு டம்ளருக்கு ஊற்றி சிறிதளவு தேன் கலந்து பருகவும். இவ்வாறு செய்தால் சளி பாதிப்பு உடனடியாக குணமாகும்.