உங்களுக்கு ஒல்லி குச்சி உடம்பா? அப்போ இந்த பாலை குடித்து உடல் எடையை அதிகரியுங்கள்!!
இன்று பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க சிரமப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் உடல் எடையை கூட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.உடல் ஒல்லியாக இருப்பதினால் பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் நபர்கள் பாலில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வேர்க்கடலை
2)பாதாம் பருப்பு
3)தேன்
4)வாழைப்பழம்
5)பால்
செய்முறை:-
ஒரு கப் வேர்க்கடலை மற்றும் பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் அரைத்த வேர்க்கடலை + பாதாம் பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை போட்டு கலக்கி குடித்து வந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.