உங்கள் அக்குள் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? இதை ஒரே நாளில் சரி செய்ய இப்படி செய்யுங்கள்!!
நாம் அனைவரும் அக்குள் வியர்வை துர்நாற்ற பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. இதனால் நாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.
இந்த துர்நற்றத்தில் இருந்து விடுபட குளித்தாலும் அந்த வாடை நம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றது.
அக்குளில் துர்நற்றம் வீசக் காரணம்:-
*அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்கள் அக்குள் பகுதிக்குள் சேர்வது.
*அதிக வியர்வை சுரத்தல்
*அதிக அளவு அக்குள் முடி இருத்தல்
அக்குள் வியர்வை துர்நாற்றத்தை வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் சரி செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்:-
*கார்ன் பிளார் பவுடர் – 5 தேக்கரண்டி
*பேக்கிங் சோடா – 5 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 5 தேக்கரண்டி காரன் பிளார் பவுடர் மற்றும் 5 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு சுத்தாமான தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழப்பிக் கொள்ளவும். இந்த கலவையை அக்குள் பகுதியில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருக்கவும்.
பின்னர் சுத்தமான தண்ணீரில் குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அக்குள் வியர்வை நாற்றம் முழுமையாக நீங்கி விடும்.
அக்குள் வியர்வை நீங்க மற்றொரு தீர்வு:-
முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அவற்றில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அடுத்து 1/4 தேக்கரண்டி கடலை மாவை எலுமிச்சையில் சேர்த்து இவற்றை எடுத்து அக்குள் பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும்.
5 நிமிடங்கள் தேய்த்த பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் அக்குள் பகுதியில் உருவாகும் கெட்ட பாக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு துர்நாற்றம் ஏற்படுவது அடியோடு நின்று விடும்.