உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் [பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நாம் வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதினால் குடற்புண் ஏற்பட்டு அவை நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது.

அல்சர் ஏற்படக் காரணம்:-

*ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம்

*உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை

அல்சர் அறிகுறி:-

*அடிவயிற்று வலி

*குமட்டல்

*வயிறு உப்பசம்

*கருப்பு நிற மலம்

*திடீர் எடை குறைவு

*புளித்த ஏப்பம்

அல்சர் பாதிப்பை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*தேங்காய் பால்

*வெந்தயம்

*ஜீரா(சீரகம்)

செய்முறை:-

முதலில் ஒரு பீட்ரூட் எடுத்து அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1 தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் பீட்ரூட் சீவி வைத்துள்ள கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 1/4 மூடி தேங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். இதை பீட்ரூட் உள்ள பவுலில் வடிகட்டி நன்கு கலந்து சாப்பிடவும். இதை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் குடற்புண் நீங்கி அல்சர் பாதிப்பு சரியாகி விடும்.