பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

0
137
#image_title

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

வயிற்றில் அல்சர், வாயில் புண், சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சனை, நாக்கில் வெள்ளை படலம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. சிலருக்கு காலை மாலை என இருவேளை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவது மட்டும் குறைந்தபாடில்லை.

வாய் துர்நாற்றத்தால் அருகில் உள்ளவர்களிடம் பேசக் கூட தயக்கம் ஏற்படும். இதனால் நமது நம்பிக்கை முழுமையாக குறைந்து விடும்.

ஒரு சிலர் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வாசனை நிறைந்த சுவிங்கம், மிட்டாய் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இதனால் சில நிமிடங்கள் மட்டுமே வாய் துர்நாற்றத்தில் தப்பிக்க முடியும். எனவே வாய் துர்நாற்றத்திற்கு நிரந்தர தரும் இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

1)சோம்பு
2)ஏலக்காய்
3)பட்டை

ஒரு தேக்கரண்டி சோம்பு, 4 ஏலக்காய் மற்றும் 2 துண்டு பட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து கொள்ளவும். தினமும் இந்த பொடியை சாப்பிடுவதற்கு முன்னர் சாப்பிட்ட பின்னர் என்று தோன்றும் பொழுதெல்லாம் சிறிது சாப்பிட்டு வந்தால் வாய்துர்நாற்றம் கட்டுப்படும்.