உங்களுக்கு பிபி பிரஷர் இருக்கா? இதை உதாசீனப்படுத்தாமல் இன்னைக்கே தீர்வு காணுங்கள்!!

Photo of author

By Divya

உங்களுக்கு பிபி பிரஷர் இருக்கா? இதை உதாசீனப்படுத்தாமல் இன்னைக்கே தீர்வு காணுங்கள்!!

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த வீட்டு வைத்தியங்களை தவறாமல் ட்ரை பண்ணவும்.

தீர்வு 01:-

1)முருங்கை இலை
2)பூண்டு
3)சின்ன வெங்காயம்
4)வெந்தயம்

ஒரு கப் அளவு தண்ணீரில் 1/4 கைப்பிடி முருங்கை கீரை,நசுக்கிய பூண்டு பற்கள் இரண்டு,நசுக்கிய சின்ன வெங்காயம் 4 மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

தீர்வு 02:-

1)தயிர்
2)வாழைத்தண்டு

1/4 கப் வாழைத்தண்டை நீரில் வேகவிட்டு தயிரில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

தீர்வு 03:-

1)வெந்தயம்
2)கறிவேப்பிலை

இந்த இரண்டையும் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தீர்வு 04:-

1)மஞ்சள் தூள்
2)பட்டை தூள்

ஒரு கிளாஸ் நீரில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/4 தேக்கரண்டி பட்டை தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தீர்வு 05:-

1)சின்ன வெங்காயம்
2)பூண்டு

ஒரு கிளாஸ் அளவு நீரில் 2 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு பல் பூண்டை நறுக்கி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.