உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!!

நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம்.

பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் எதிர்கால வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாகவும், கேள்வி குறியானதாகவும் மாறிவிடும்.

இதை மனதில் வைத்துக் கொண்டு எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். ஒரு முறை கடன் வாங்கி விட்டாலே வாழ்வில் நிம்மதியை இழந்து விடுவோம். அந்த கடனை திருப்பி செலுத்தும் வரை பலருக்கு தூக்கம் இருக்காது.

இந்த கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது.

கடன் பிரச்சனை நீங்க வழி:-

தேவையான பொருட்கள்:-

*பித்தளை தட்டு

*விரலி மஞ்சள்

*கல் உப்பு

*பூ

*அகல் விளக்கு

*நெய்

*திரி

பூஜை செய்ய உகந்த நாள் மற்றும் நேரம்:-

செவ்வாய் கிழமை – காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இந்த பூஜையை செய்யலாம்.

முதலில் திங்கள் அன்று வீடு மற்றும் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். மறுநாள்(செவ்வாய்) காலையில் இந்த பூஜை செய்ய விரும்பினால் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் செல்லவும்.

கடவுள் படங்களுக்கு முன் அகல் விளக்கு ஒன்றை வைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.

அடுத்து உங்கள் இரண்டு உள்ளங்கைகளில் கல் உப்பு நிரப்பி மஹாலட்சுமி தாயாரிடம் கை ஏந்தி மனதார கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த உப்பை அப்படியே ஒரு பித்தளைத் தட்டில் வைக்கவும்.

பின்பு அந்த உப்பில் உங்கள் ஆல் காட்டி விரலால் உங்களது மொத்த கடன் தொகையை எழுதவும். அடுத்து அதன் மீது ஒரு விரலி மஞ்சள் வைக்கவும். அதற்கு ஒரு பூ வைக்கவும். இதை அப்படியே பூஜை அறையில் 11 நாட்கள் வைத்து விடவும்.

12வது நாள் அந்த மஞ்சள் கிழங்கை பூஜை அறையிலேயே வைத்து விட்டு உப்பை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நிரப்பி அதில் உங்கள் கைகளால் கரைத்து விடவும். அந்த தண்ணீரை வாசலுக்கு வெளியே ஊற்றிவிட்டு உங்கள் கை கால்களைக் கழுவி விடவும்.

இதே போல் 3 முறை நீங்கள் செய்து முடிக்கவும். அதற்குள் நிச்சயம் உங்கள் கடன் தீர வழி பிறக்கும்.