பூசணி விதை இருக்கா? அப்போ இப்படி செய்யுங்கள்.. என்றும் இளமையுடன் இருக்கலாம்..!

Photo of author

By Divya

பூசணி விதை இருக்கா? அப்போ இப்படி செய்யுங்கள்.. என்றும் இளமையுடன் இருக்கலாம்..!

60 வயதை கடந்த நபர்கள் இந்த வைத்தியத்தை பின்பற்றி வந்தாலும் கடந்து போன இளமையை மீட்டெடுத்து வர முடியும்.

தேவையான பொருட்கள்…

*பூசணி விதை
*முந்திரி பருப்பு
*பாதாம்
*பிஸ்தா
*எள்ளு
*வெள்ளரி விதை
*கருப்பு உளுந்து
*பார்லி அரிசி

செய்முறை

பூசணி விதை 20 கிராம், வெள்ளரி விதை 20 கிராம் எடுத்து உலர்த்திக் கொள்ளவும். பிறகு முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.

கருப்பு எள் 20 கிராம், கருப்பு உளுந்து 30 கிராம், பார்லி அரிசி 30 கிராம் அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடித்து சேமித்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் அளவு பால் காய்ச்சவும். பிறகு அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 2 ஸ்பூன் அளவு பொடி சேர்த்து கஞ்சி காய்ச்சி குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வர சரும பிரச்சனை, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.