குடல் புண் சில தினங்களில் ஆறிவிடும்.. தயிரை இப்படி பயன்படுத்தினால்..!

0
170
#image_title

குடல் புண் சில தினங்களில் ஆறிவிடும்.. தயிரை இப்படி பயன்படுத்தினால்..!

அதிக காரம் நிறைந்த உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவை சாப்பிடும் பொழுது குடலில் புண்கள் ஏற்படத் தொடங்கி விடுகிறது. சிலர் உணவு உட்கொள்ளாமல் தவிர்த்து வருவதால் இவ்வாறு பாதிப்பு உருவாகிறது.

இந்த குடல் புண்களை தயிர் மற்றும் நெல்லிக்காய் வைத்துக் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தயிர்…

இதில் அதிகளவு லாக்டிக் அமிலம் நிறைந்து இருக்கின்றது. இவை குடல் புண்ணை ஆற்றக் கூடியவை.

நெல்லிக்காய்…

இவை வைட்டமின் சி சத்து கொண்ட குளிர்ச்சி நிறைந்த பொருள். இதை சாப்பிடும் பொழுது குடல் புண் ஆறும்.

தேவையான பொருட்கள்…

தயிர்
பெரு நெல்லிக்காய்

தயிர் என்றால் கடைகளில் விற்க கூடிய பாக்கெட் தயிர் அல்ல. வீட்டில் துவைய வைக்கும் தயிர் அல்லது மாடு வைத்திருப்பவர்களிடம் இருந்து கிடைக்க கூடிய தயிரை பயன்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும்.

அடுத்து ஒரு பெரு நெல்லிக்கியை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் விதையை மட்டும் அப்புறப்படுத்தி விடவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பெரு நெல்லி துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள தயிரை சேர்த்து ஒரு சுத்து விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு பவுலுக்கு மாற்றி காலை உணவிற்கு முன்பு சாப்பிட்டு வரவும். இவ்வாறு செய்வதினால் குடலில் உள்ள புண்கள் ஆறத் தொடங்கும்.