வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது.வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம்,பூ,தண்டு,இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள தண்டின் பயன் தெரிந்தால் இனி நிச்சயம் இதை உணவில் சேர்த்து கொள்வீர்கள்.இந்த வாழைத்தண்டில் அதிகளவு இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6,நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது.

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்:-

*அடிக்கடி வாழைத்தண்டில் சமைத்து உண்டு வந்தோம் என்றால் உடலில் ஜீரண சக்தி மேம்படும்.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும்.

*சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படும் நபர்கள் வாழைத்தண்டை உணவு எடுத்து வரலாம்.இதன் மூலம் அந்த பாதிப்பு விரைவில் சரியாகும்.

*அடிக்கடி வாழத்தாண்டை உணவில் எடுத்து வந்தோம் என்றால் உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுகளின் அளவு அதிகரித்து இரத்த ஓட்டம் சீராகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.வாழைத்தண்டில் உள்ள இரும்புசத்து மற்றும் வைட்டமின் பி6 தான் இதற்கு முக்கிய காரணம்.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

*வாழைத்தண்டில் உள்ள அதிகளவு பொட்டாசியம் உடலில் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

*அதேபோல் வாழைத்தண்டு சாறு பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

*அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ள இந்த வாழைத்தண்டு பசியை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு சாறு சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது பானமாக உள்ளது.
அதேபோல் குடல் இயக்கத்திற்கு சிறந்த ஒன்றாக இந்த வாழைத்தண்டு சாறு இருக்கிறது.

*வாழைத்தண்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.இவை உடலில் இரத்த அழுத்தத்தை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதேபோல் கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கிறது.எனவே வாழைத்தண்டில் பொரியல்,சூப் உள்ளிட்டவை செய்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.பல்வேறு நோய் பாதிப்பில் இருந்தும் தப்பித்து விடலாம்.