சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா?

நவீன உலகில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பாக சர்க்கரை நோய் உள்ளது. இதை இயற்கை முறையில் குணமாக்குவது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பாகற்காய்
2)வெந்தயம்
3)கொய்யா இலை
4)பப்பாளி இலை
5)கோவை தழை

செய்முறை:-

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சர்க்கரை நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

முதலில் ஒரு பாகற்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை, பப்பாளி இலை, கோவைக்காய் இலையை தண்ணீரில் போட்டு அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய பாகற்காய் மற்றும் மூன்று வகை இலைகளை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். காயவைத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கவும்.

அதன் பின்னர் சிறிது வெந்தயத்தை வறுத்து பொடியாக்கவும். அரைத்த இந்த இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடியில் இருந்து 1 1/2 தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.