தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?

Photo of author

By Divya

தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து மிக்க பழங்கள் உண்பது அவசியம் ஆகும். இதில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை, வாழை என்று அதிக ஊட்டச்சத்து மிக்க பழங்கள் இருக்கின்றது.

இந்த ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றான வாழையில் கற்பூரவள்ளி வாழை, மொந்தன், பச்சை வாழை, ரஸ்தாலி, பூவன், செவ்வாழை, நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது.

இந்த வாழை வகைகளில் அதிக ஊட்டச்சத்துகளை உள்ளடக்கிய செவ்வாழை ஆண்மை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு என்று உடலில் உள்ள பலவித பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது.

ரெட் பனானா சத்துக்கள்:-

பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், அயர்ன், மக்னீசியம், ஃபோலிக் ஆசிட், உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் தாது உப்புகள்.

ரெட் பனானா(செவ்வாழை) சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்குவதில் ரெட் பனானா முக்கிய பங்கு வகிக்கிறது.

**செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் எர்ச்சல், பார்வை குறைபாடு, கண் வலி, வீக்கம் உள்ளிட்ட கண் தொடர்பான பாதிப்பை சரி செய்ய உதவும்.

**ஆண்மை குறைபாடு, விந்தணு குறைபாடு இருக்கும் ஆண்கள் தினமும் 1 செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது.

**வாய் துர்நாற்றம், பல் ஆடுதல் உள்ளிட்ட பல் சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு செவ்வாழைப்பழம் உரிய தீர்வாக இருக்கும்.

**நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய தினமும் 1 செவ்வாழை சாப்பிடுவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

**தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு சரியாகும்.

**தோல் தொடர்பான பாதிப்பு குணப்படுத்த செவ்வாழை பெரிதும் உதவுகிறது.

**மனித மூளை செயல்பாட்டை அதிகரிப்பதில் செவ்வாழைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

**இதய இயக்கம், இரத்த ஓட்டம், சிறுநீரக இயக்கம் உள்ளிட்டவற்றிற்கு செவ்வாழை சிறந்த தீர்வாக இருக்கும்.

**கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி அவற்றை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

**அதேபோல் செரிமான கோளாறுக்கு செவ்வாழை அருமருந்தாக விளங்குகிறது.