தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

0
48
#image_title

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

நம் அனைவருக்கும் கொய்யா பழம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. இந்த பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இந்த கொய்யா பழத்தை ஜூஸ் செய்து உண்டு வருவதன் மூலம் உடல் பல ஆரோக்கிய நன்மைகளை அடையும்.

கொய்யா ஜூஸுல் உள்ள சத்துக்கள்:-

*பொட்டாசியம்

*நார்ச்சத்து

*கார்போஹைட்ரேட்

*புரதம்

*வைட்டமின் சி மற்றும் பி6

*கால்சியம்

*இரும்பு

*மெக்னீசியம்

கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

**இந்த ஜூஸில் அதிகப்படியான பைட்டோ நியூட்ரியன்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சதுக்கள் எளிதில் கிடைத்து விடும்.

**அதிகளவு நார்ச்சத்து கொண்டுள்ள இந்த கொய்யா ஜூஸ் செரிமான கோளாறு, வயிற்று தொடர்பான பாதிப்பு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.

**வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 1 கிளாஸ் கொய்யா ஜூஸ் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். கொய்யா ஜுஸில் உள்ள அமில தன்மை இந்த பாதிப்புகளை சரி செய்யும்.

**மூலம் பாதிப்பால் அவதி படும் நபர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொய்யா பழ ஜூஸ் பருகி வந்தால் விரைவில் அந்த பாதிப்பு சரியாகும்.

**இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த கொய்யா பழ ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

**இதயம் தொடர்பான பிரச்சனையை சரி செய்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.