மருத்துவர்கள் வாழைப் பூவை கட்டாயம் உணவில் சேர்க்க சொல்ல காரணம் என்னவென்று தெரியுமா?

Photo of author

By Divya

மருத்துவர்கள் வாழைப் பூவை கட்டாயம் உணவில் சேர்க்க சொல்ல காரணம் என்னவென்று தெரியுமா?

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உண்ணுவது அவசியம் ஆகும். அந்தவகையில் மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது. வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம், பூ, தண்டு, இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள பூவின் பயன் தெரிந்தால் இனி நிச்சயம் இதை உணவில் சேர்த்து கொள்வீர்கள்.

வாழைப்பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, பி1.

வாழைப்பூவை சமையலில் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

வாழைப்பூவில் வடை, பொரியல், குழம்பு, ப்ரை என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இவ்வாறு வாழைப்பூ உணவில் சேர்த்து வந்தோம் என்றால் உடலில் செரிமான பாதிப்பு நீங்கி ஜீரண சக்தி மேம்படும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த வாழைப்பூ பெரிதும் உதவும்.

வாழைப்பூ உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வாழைப்பூவில் உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி பருகினால் தீராத வயிற்று வலி பாதிப்பு சரியாகும். அதேபோல் வாழைப்பூ பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.

விந்தனு குறைபாடு இருக்கும் ஆண்கள் இந்த வாழைப்பூவை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. மலசிக்கல் சீதபோதி, இரத்த மூலம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் இந்த வாழைப்பூ சிறந்த தீர்வாக இருக்கும். இரத்த மூலம், உள் மூலம், வெளி மூலம் உள்ளிட்ட மூல நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாழைப்பூவை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது.