இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

Photo of author

By Divya

இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

Divya

இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய மூலிகை சதகுப்பை. சதகுப்பை வேர், விதை, பூ அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. சதகுப்பை பார்ப்பதற்கு சீரகம் போல் தோற்றம் கொண்டிருக்கும். சதகுப்பை சுவசப் பிரச்சனை, வயிறு தொடர்பான பாதிப்பை குணமாக்கும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்.

சதகுப்பை
திப்பிலி
சீரகம்

ஒரு கிளாஸ் அளவு நீரில் இந்த மூன்று பொருட்களையும் சம அளவு சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் வயிறு உப்பசம், செரிமானக் கோளாறு, வயிறு வலி, வயிறு மந்தம் உள்ளிட்ட வயிறு சம்மந்தமான பாதிப்புகளை குணப்படுத்தும்.

சதகுப்பை பூ
கருஞ்சீரகம்

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

சதகுப்பை விதை பொடி

ஒரு கிளாஸ் அளவு நீரை கொதிக்க விட்டு சதகுப்பை பொடியை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

சதகுப்பை இலை பொடி
நாட்டு சர்க்கரை

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தலை பாரம், தலை வலி, மந்த நிலை சரியாகும்.