இது தெரியுமா? தினமும் ஒரு ஸ்பூன் ஓமத்தை இப்படி சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டி இருக்காது!!
நவீன காலத்தில் அனைவரும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். துரித உணவால் ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் தவித்து தவித்து வருபவர்களுக்கு ஓமம் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அதேபோல் மழைக்காலங்களில் அனைவரையும் பாதிக்கும் சளி. இருமல் முதற்கொண்டு செரிமானக் கோளாறு, முடி உதிர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
ஓமத்தில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-
பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், ப்ரோட்டீன், பைபர், இரும்புச்சத்து, சோடியம், தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.
தினமும் ஓமம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-
**ஓமம் மற்றும் மிளகை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
**வாயுத் தொல்லை இருப்பவர்கள் சிறிதளவு ஓமத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.
**செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் 1 ஸ்பூன் ஓமமப் பொடியை சுடுநீரில் கலந்து அருந்தலாம்.
**சளி, இருமல் பாதிப்பு நீங்க சிறிதளவு ஓமம், சீரகம் மற்றும் மிளகை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகலாம்.
**உடல் பருமனால் அவதிப்படும் நபர்கள் சிறிதளவு வினிகர் மற்றும் தேனுடன் 1/2 தேக்கரண்டி ஓமனத்தை கலந்து சாப்பிடுவதன் மூலம் தீர்வு கிடைக்கும்.
**அல்சர் பாதிப்பு குணமாக வறுத்து பொடி செய்த ஓமம் மற்றும் வெந்தயத்தை மோரில் கலந்து பருவகுவது நல்லது.