இது தெரியுமா? மருதாணி பூ தைலம் இதற்கெல்லாம் தீர்வா?

Photo of author

By Divya

இது தெரியுமா? மருதாணி பூ தைலம் இதற்கெல்லாம் தீர்வா?

மருதாணி செடியில் உள்ள அதன் இலை மட்டும் தான் நமக்கு பயன் தரும் என்று இன்றுவரை பலரும் நம்பி வருகின்றோம். ஆனால் அதன் பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை.

மருதாணி பூவால் நமக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம். மருதாணி இலை போலவே அதன் பூவும் குளிரிச்சி நிறைந்தவை ஆகும். இந்த ஒரு பூ நம் உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்க கூடியவை.

இந்த மருதாணி பூவை தைலமாக தயார் செய்து உடலுக்கு பயன்படுத்தலாம்.

மருதாணி பூ தைலம் – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*மருதாணி பூ

*தேங்காய் எண்ணெய்

செய்முறை…

முதலில் தைலம் தயார் செய்ய மருதாணி பூவை எடுத்துக் கொள்ளவும். பூவில் தூசு, பூச்சி இல்லாதவாறு சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு சட்டி வைத்து தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதில் மருதாணி பூ சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி கொள்ளவும். மருதாணி பூ முழுவதும் பொரிந்து எண்ணெயில் கலந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.

இந்த தைலத்தை ஒரு ஈரமில்லாத பாட்டிலில் ஊற்றி சேமித்து கொள்ளவும்.

மருதாணி தைலத்தின் பயன்கள்…

மருதாணி பூ குளிரிச்சி நிறைந்தவை என்பதினால் இவை உடல் சூட்டை விரைவில் குறைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. எனவே இதை வயிற்று பகுதியில் தடவி வந்தால் உடல் சூடு குறையும்.

குளிப்பதற்கு முன்னர் மருதாணி பூ தைலத்தை உடல் முழுவதும் பூசி கொண்டு சிறிது நேரம் கழித்து குளித்து வர உடல் உஷ்ணம் நீங்கும்.

தோல் சார்ந்த பாதிப்புகளை குணமாக்க இந்த தைலம் சிறந்த தேர்வாக இருக்கும்.

பாத வெடிப்பு, தீ காயம் ஆகியவற்றின் மீது இந்த தைலத்தை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.