மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் இந்த வைத்தியம் தெரியுமா?

0
235
#image_title

மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் இந்த வைத்தியம் தெரியுமா?

மூட்டுகளில் வலி, வீக்கம் இருந்தால் தாமதம் செய்யாமல் அதை குணமாக்க தீர்வு காண்பது நல்லது.

இதை கவனிக்க தவற விட்டால் முதுமை காலத்தில் பல தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

தீர்வு 01:-

*அவரைக்காய்
*மிளகுத் தூள்
*சுக்குத் தூள்

ஒரு கப் அவரைக்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு வாணலியில் சேர்க்கவும்.

அடுத்து அதில் 1/4 ஸ்பூன் மிளகுத் தூள், 1 ஸ்பூன் சுக்குத் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அதில் 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் வற்றும் அளவிற்கு கொதிக்க விட்டு ஆற விடவும்.

பயன்படுத்தும் முறை….

இந்த அவரை பேஸ்டை மூட்டுகள் மீது பற்று போல் பூசவும். தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் இந்த் பற்றை மூட்டுகளில் போட்டு வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் அனைத்தும் குணமாகும்.

தீர்வு 02:-

*இஞ்சி
*நல்லெண்ணெய்

ஒரு முழு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுது பதத்திற்கு அரைக்கவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அடுத்து அரைத்த இஞ்சி பேஸ்டை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.

இஞ்சி நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். இதை பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை….

இந்த இஞ்சி பேஸ்டை மூட்டுகளில் வலி உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் விரைவில் வலி, வீக்கம் அனைத்தும் சரியாகும்.