இந்த 3 பொருட்கள் சேர்த்த பாலை தினமும் குடித்து வந்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?

Photo of author

By Divya

இந்த 3 பொருட்கள் சேர்த்த பாலை தினமும் குடித்து வந்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குவதில் பாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் பால் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்பதினால் அதை பலரும் தவிர்த்து வருகின்றனர். ஆனால் பாலில் மஞ்சள், மிளகு, தேன் சேர்ந்து அறிந்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதேவேளை அதிக ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

பாலில் மஞ்சள், மிளகு, தேன் கலந்து அருந்தினால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பாலில் உள்ள கால்சியம் சத்து உடலில் உள்ள எலும்பை வலுவாக்க உதவுகிறது. சூடான பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் 2 மிளகு தட்டி போட்டது மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கிருமிகள் அளிக்கப்பட்டு விடும். சளி, வறட்டு இருமலை குணப்படுத்த செய்யும்.

இரத்த அழுத்த பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. தொண்டை எரிச்சல், தொண்டை வலி, புண் உள்ளிட்ட தொண்டை தொடர்பான பாதிப்புகளை குணமாக்கும். உண்ணும் உணவை முறையாக செரிக்க உதவும். சரும பிரச்சனைகளை நீக்கும். இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.