யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

Photo of author

By Divya

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

இன்றைய உலகில் டீ, காபி விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. டீ, காபியுடன் தான் பெரும்பாலானோருக்கு அன்றைய தினம் தொடங்குகிறது. ஒரு சிலர் ஒருநாளைக்கு 3 முதல் 5 முறை டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இது கிட்டத்தட்ட போதைக்கு அடிமையாவதற்கு சமம்.

டீ, காபியை குடித்தால் தான் தலைவலி விடும் என்று சொல்லி கேள்விபட்டிருப்போம். சிலர் சர்க்கரை அதிகம் போட்டு டீ குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார். சிலர் பாலில் டீ தூள், காபி தூள் அதிகம் போட்டு குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பர். இந்த பழக்கம் நம் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்து விடும்.

குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி குடிக்கும் டீ, காபி உடலுக்கு எந்த அளவிற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வு நம் மக்களிடத்தில் இல்லை.

டீ, காபி யாரெல்லாம் தவிர்ப்பது நல்லது:

அல்சர், வாய்ப்புண், நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் டீ, காபி அருந்தக் கூடாது.

இரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

அதிகளவு டீ அருந்துவதால் நிம்மதியான தூக்கத்தை இழந்து விடுவோம்.

தொடர்ந்து டீ குடித்து வந்தால் இளநரை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இரத்த கொதிப்பு இருப்பவர்கள் டீ குடிப்பதை தவிர்க்கவும்.