சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!!
நாம் தினமும் விரும்பி பருக்கும் பானம் டீ,காபி.இதை குடித்தால் நாள் அன்றைய தினமே நகரும் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அனால் இந்த டீ,காபியை அதிகளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு ஆரோக்கியமற்ற பானமாக மாறிவிடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரிந்தவர்களும் தொடர்ந்து டீ,காபியை பருகி தான் வருகிறார்கள்.காரணம் அதன் சுவை அற்புதமாக இருக்கும் என்பதினால்.
இந்த ஆரோக்கியமற்ற பானத்தை விட்டுவிட்டு உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும் சுக்கு மல்லி காபியை பருக பழகுங்கள்.இந்த சுக்கு மல்லி காபி தலைப்பாரம்,சளித்தொல்லை, தலைவலி உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு உரிய தீர்வாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி
மிளகு – 5
ஏலக்காய் – 1
சுக்கு – சிறு துண்டு
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:-
1)அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை போட்டு வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
2)ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை,ஏலக்காய் 1,சுக்கு சிறிய துண்டு மற்றும் மிளகு 5 சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
3)அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.
4)பின்னர் அதில் பொடி செய்து வைத்துள்ள சுக்கு + மிளகு + கொத்தமல்லி + ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி சேர்க்கவும்.அதை நன்கு கொதிக்க விடவும்.பிறகு அதில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விடவும்.
5)பின்னர் 2 டம்ளர் தண்ணீர் சுண்டி 1 டம்ளராக வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.