உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

0
233
#image_title

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் சளி,இருமல்,காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று மருத்துவமனையை நாட வேண்டி இருக்கு.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் அடிக்கடி சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மருந்து,மாத்திரை,கசாயம் இல்லாத ஓர் எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை
2)சூடம்
3)தேங்காய் எண்ணெய்
4)நல்லெண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.ஒரு நிமிடத்திற்கு சூடு படுத்தியதும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் அதில் ஒரு சூடத்தை போட்டு கரைத்து மார்பில் தேய்க்கவும்.பிறகு ஒரு அகல் விளக்கில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.இந்த விளக்கு தீயில் ஒரு வெற்றிலையை வாட்டி எடுக்கவும்.

இதை மார்பின் மேல் பற்று போல் போடவும்.இவ்வாறு செய்தால் உடல் சூடு குறையும்.மார்பில் தேங்கி கிடந்த சளி கரைந்து நாசி அல்லது மலம் வழியாக வெளியேறும்.

Previous articleதமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!!
Next articleதொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!