அடிக்கடி மூச்சு பிடிப்பு ஏற்படுகிறதா..? அப்போ இதை அவசியம் ஒருமுறை செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

0
83
#image_title

அடிக்கடி மூச்சு பிடிப்பு ஏற்படுகிறதா..? அப்போ இதை அவசியம் ஒருமுறை செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

மூச்சு பிடிப்பு என்பது சாதாரண பாதிப்பு அல்ல. ஒருவருக்கு மூச்சு பிடிப்பு ஏற்பட்டு விட்டால் அவரால் எளிதில் மூச்சு விட முடியாது. மூச்சு விடும் பொழுது எல்லாம் ஒரு வித வலி ஏற்படும். முதுகை அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.

இதற்கு முக்கிய காரணம் அதிகப்டியான எடை தூக்குதல், மார்பு எலும்புகளின் மேல் உள்ள தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த மூச்சு பிடிப்பு பாதிப்பு ஏற்படும்.

மூச்சுப்பிடிப்பு நீங்க எளிய வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்

*பெருங்காயத் தூள்

*சுக்குத் தூள்

*கட்டிக் கற்பூரம்

செய்முறை:-

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதை நன்கு ஆறவிட்டால் கஞ்சி கெட்டித் தன்மை ஆகிவிடும். பின்னர் கெட்டி தன்மைக்கு வந்த கஞ்சியில் இருந்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சுக்கு பொடிசேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து 1/2 தேக்கரண்டி அளவு பெருங்காயத் தூள் சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விடவும்.

பிறகு சிறிதளவு கட்டி கற்பூரத்தை உடைத்து அதில் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அடுப்பை அணைத்து இந்த கலவையை மூச்சு பிடிப்பு பாதிப்பு இருக்கும் இடங்களில் தடவி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் மூச்சு பிடிப்பு மட்டும் இன்றி வாயுத் தொல்லை, இடுப்பு வலி, முதுகு வலி உள்ளிட்டவைகளை சரியாகும்.