தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

0
169
#image_title

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

மலம் இறுகி கிடந்தால் அவை வெளியில் வருவது சற்று கடினமாக இருக்கும். இதனால் தினமும் முக்கியபடி மலம் கழிக்கும் பழக்கம் உருவாகிவிடும். அதுமட்டும் இன்றி வறண்ட மலம் வெளியியேறும் போது ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி உணர்வு ஏற்படும்.

இந்த மலச்சிக்கல் நாளடைவில் மூல நோயாக உருவெடுக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. எனவே அலட்சியம் காட்டாமல் குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்ற முயலுங்கள்.

*கரியபோளம் – 1 சிறு துண்டு
*பனங்கற்கண்டு – தேவைக்கேற்ப

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் 1 துண்டு கரியபோளம் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் தருணத்தில் சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் கழித்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்தால் வயிற்றில் இறுகி போன மலம் இளகி வெளியேறி விடும்.

கரியபோளம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பொருள் ஆகும். இவை மூசாம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கரியபோளம் கற்றாழை ஜெல்லில் இருந்து வடியும் திரவத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கரியபோளம் மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த தீர்வாக விளங்குகிறது.