ஆஸ்துமா நோயால் தினமும் கஷ்டமா… ஆஸ்துமாவை விரட்ட ஆடாதொடையை இப்படி பயன்படுத்துங்க…
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அனைவருக்கும் அந்த நோயை கட்டுப்படுத்த எளிமையான வழிமுறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமா என்பது மூச்சுக் குழாய்கள் குறுகி சுவாசப் பாதையில் கூடுதல் சளியை உருவாக்கும் ஒரு சுவாசக் கோளாறு உள்ள நோய் ஆகும். இந்த நோய் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
இந்த ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்படுத்த ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு மருந்தை கையில் வைத்திருப்பார்கள். இந்த பதிவில் அந்த ஆஸ்துமாவை மருந்து இல்லாமல் கட்டுப்படுத்த எளிய வீட்டு வைத்திய முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவில் ஆஸ்துமா பிரச்சனையை ஆடாதொடை இலைகளை வைத்து எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். ஆடாதொடை இலை சளிக்கு ஒரு சிறந்த நிவாரணி ஆகும். இந்த ஆடாதொடை இலையை வைத்து உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தலாம். இந்த பதிவில் ஆஸ்துமாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.
ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* ஆடாதொடை இலை
* தேன்
தயார் செய்யும் முறை…
முதலில் ஆடா தொடை இலைகளை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் நான்கு பங்கு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள ஆடாதொடை இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நான்கு பங்கு நீரானது ஒரு பங்காக வரும் வரை கொதிக்க வைத்து பின்னர் இதை இறக்கி விட வேண்டும்.
காய்ச்சிய இந்த நீரை வடிகட்டி இதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகலாம். இவ்வாறு ஆடாதொடை இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.
இந்த நீரை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காய்ச்சி குடித்து வந்தால் காசநோய் கூட குணமாகும்.