கண்களின் பார்வையை அதிகரிக்க வேண்டுமா! அப்போது இந்த 7 உலர் பழங்களை சாப்பிடுங்க!!

0
93
#image_title

கண்களின் பார்வையை அதிகரிக்க வேண்டுமா! அப்போது இந்த 7 உலர் பழங்களை சாப்பிடுங்க!!

நம்முடைய கண்களின் பார்வையை அதிகரிக்க உதவும் ஏழு வகையான உலர்ந்த பழங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக மனித உடலில் இருக்கும் உறுப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய உறுப்புகளில் ஒன்றாக நம்முடைய கண்கள் இருந்து வருகின்றது. கண் பார்வை என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. எந்தவொரு பொருளையும் பார்ப்பதற்கு கண்கள் முக்கியமானதாக இருக்கின்றது.

கண்களில் ஏற்படும் வலி, பார்வை குறைபாடு என கண் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்த இயற்கை ஒருபுறம் காரணமாக இருந்தாலும் நாமும் முக்கியமான காரணமாக இருக்கின்றோம். அதாவது இரவில் அதிகநேரம் விழித்திருப்பது, டிவி, கம்பியூட்டர், செல்போன் போன்ற மின் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் மனிதனின் கண் பார்வையை குறையச் செய்யும். அவ்வாறு கண் பார்வை குறையும் பொழுது நாம் கண்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் கண் பயிற்சிகள் பேன்றவற்றை செய்வதுடன் கண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சத்துக்கள் நிறைந்த உணவுகளில் உலர்ந்த பழங்களும் பருப்புகளும் வரும். அவ்வாறு கண்பார்வையை அதிகரிக்க நாம் சாப்பிட வேண்டிய உலர்ந்த பழங்கள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

கண்பார்வையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உலர் பழங்கள் மற்றும் பருப்புகள்…

* நம்முடைய கண் பார்வையை அதிகரிக்க நாம் ஆப்ரிகாட் என்னும் உலர்ந்த பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் கண்களுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது.

* கண்களின் பார்வையை மேம்படுத்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள வால்நாட் சாப்பிட்டு வரலாம்.

* கண்களின் பார்வையை அதிகரிக்க நாம் கருப்பு உலர் திராட்சை சாப்பிடலாம். கருப்பு உலர் திராட்சையில் பாலிபினால் சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் ஆன்டாஆக்சிடன் சத்துக்கள் இருப்பதால் கண்களை ஃபிரீ ரேடிக்கல் சேலத்தில் இருந்து நமது கண்களை பாதுகாக்கின்றது.

* கண்களின் பார்வையை அதிகரிக்க நாம் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த பாதம் சாப்பிட்டு வரலாம்.

* கண்களின் பார்வையை அதிகரிக்க செய்ய வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ள ப்ரூன்ஸ் என்று அழைக்கப்படும் ஆல்பக்கோடா உலர்ந்த பழத்தை சாப்பிட வேண்டும்.

* கண்களின் பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலில் இரும்புச்சத்து அதிகரிப்பை ஏற்படுத்தும் பேரீச்சம்பழத்தை சாப்பிட வேண்டும். பேரீச்சம் பழத்தில் கந்தகம், கால்சியம், பொட்டாசியம் இன்னும் பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் நமது கண்களின் பார்வையை மேம்படுத்தி கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.

* கண்களின் பார்வையை மேம்படுத்த வேண்டும் என்றால் ஜியாக்சாந்தின் என்ற ஆன்டிஆக்சிடன் சத்துக்கள் உள்ள முந்திரி பருப்பை சாப்பிட வேண்டும்.

Previous articleஉங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! இதோ அதை குணப்படுத்தும் ஜூஸ் வகைகள்!!
Next articleஅம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!