உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! இதோ அதை குணப்படுத்தும் ஜூஸ் வகைகள்!!

0
32
#image_title

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! இதோ அதை குணப்படுத்தும் ஜூஸ் வகைகள்!!

நம்மில் பலருக்கும் இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும் சில ஜூஸ் வகைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல் என்பது எல்லாருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைதான். இது எதனால் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாம் இரவில் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாமல் அப்படியே இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படக்கூடும். மேலும் செரிமான மண்டலத்தின் இயக்கம் சரியாக இல்லை என்றாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். குடல் இயக்கம் சாதாரணமாக இல்லை என்றாலும் மலச்சிக்கல் ஏற்படும். இந்த பதிவில் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த வீட்டிலேயே தயாரித்துக் குடிக்கக் கூடிய சில ஜூஸ் வகைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும் ஜூஸ் வகைகள்…

* மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கலாம். வெள்ளரிக்காய் சாறில் இயற்கையாகவே நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகின்றது. மேலும் இது சாதாரணமான குடல் இயக்கத்திற்கு பயன்படுகின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பேரிக்காய் ஜூஸ் குடிக்கலாம். பாகிஸ்தானில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை குடல் இயக்கத்தை எளிதாக்கி உணவை செரிமானம் செய்து மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். ஆரஞ்சு ஜூஸில் விட்டமின் சி, தாதுக்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை இருக்கிறது. இவை அனைத்தும் நம்முடைய குடல் இயக்கத்தை எளிமையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த செர்ரி ஜூஸ் குடிக்கலாம். செர்ரி ஜூஸில் பாலிபினால் சத்துக்கள், நீர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை உள்ளது. செர்ரியில் உள்ள நார்ச்சத்து மலத்தை ஒன்றாக சேர்த்து சீராக வெளியேற்றுகின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை ஜூஸ் குடிக்கலாம். திராட்சையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உடலை ஹைட்ரேட் செய்வதற்கு உதவி செய்கின்றது. திராட்சையில் சர்பிடால் என்ற சர்க்கரை ஆல்கஹால் இருக்கின்றது. இவை அதிகப்படியான நீரை சேர்த்து மிக எளிதாக மலத்தை வெளியேற்ற உதவி செய்கின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

* மலச்சிக்கல் பிரச்சனை உள்ள நபர்கள் ப்ரூன் ஜூஸ் குடிக்கலாம். ப்ரூன் ஜூஸ் நமது குடல் இயக்கத்தை ஆரோக்கியமான முறையில் செயல்படுத்துகின்றது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் சாதாரணமாக குணமடைகின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அனைவரும் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். ஆப்பிள் ஜூஸில் நார்ச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின் சத்துக்கள் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளது. ஆப்பிள் ஜூஸானது மலத்தில் தண்ணீரை தக்கவைத்து எளிமையாக மலம் வெளியேறுவதற்கு உதவி செய்கின்றது. மேலும் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கின்றது.